இந்தத் தகவலை வெளியிட்டுள்ள அயல்நாட்டுச் செய்தியாளர்கள், வன்னியில் உள்ள வன்னிப்படைத் தலைமையகத்தைக் குறிப்பிட்டுள்ளனர்.
ரஷ்ய தயாரிப்பான இந்த குண்டு வீச்சு விமானம் குரொக்கடைல் நோஸ் என்ற லேசர் கருவியையும் கொண்டுள்ளது. அத்துடன் ராக்கட், ஏவுகணைகள், பல்வகையான குண்டுகளையும் எடுத்துச் செல்லக்கூடியது.
விமானம் காணாமல் போனபோது அதில் மூன்று விமானப் படையினர் இருந்துள்ளனர்.
அண்மையில் வன்னியில் இடம்பெயர்ந்த பொதுமக்கள் மீதும், விடுதலைப் புலிகளின் இலக்குகள் மீதும் நடத்தப்பட்ட தடைசெய்யப்பட்ட கொத்து (கிளஸ்டர்) குண்டு வீச்சுகளும் இந்த விமானத்தின் மூலமே நடத்தப்பட்டுள்ளது.