அஜ்மல் கஸாப்புக்கு பாகிஸ்தானின் உதவி கிடைக்காது

வியாழன், 8 ஜனவரி 2009 (18:38 IST)
மும்பை மீதான பயங்கரவாதத் தாக்குதலில் கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளி அஜ்மல் கஸாப் தங்கள் நாட்டைச் சேர்ந்தவர்தான் எனப் பாகிஸ்தான் ஒப்புக் கொண்டாலும், அவருக்கு எந்த உதவியும் வழங்கப்படாது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

மும்பை தாக்குதலில் கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளி அஜ்மல் கஸாப் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்தான் என அந்நாட்டு அரசு நேற்றிரவு ஒப்புக் கொண்டதைத் தொடர்ந்து, கஸாப்புக்கு பாகிஸ்தான் உதவி புரியுமா என்று டான் நாளிதழ் சார்பில் மூத்த அதிகாரி ஒருவரிடம் கேட்கப்பட்டது.

அதற்கு, பயங்கரவாதி கஸாப் செய்த செயலால் பாகிஸ்தான் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, கஸாப்புக்கு உதவி செய்ய அனுமதிக்கும் படி இந்தியாவிடம் கோர மாட்டோம் என்று அவர் கூறியுள்ளார்.

மும்பை மீதான பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபட்டதன் மூலம் அவர் மிகவும் கொடிய செயலை செய்து விட்டார் என்றும், அவருக்கு எந்தவித உதவியையும் பாகிஸ்தான் செய்யாது என்றும் தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்