விடுதலைப் புலிகள் இயக்கத்தை தடை செய்தது சிறிலங்க அரசு

வியாழன், 8 ஜனவரி 2009 (12:51 IST)
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை தடை செய்யப்பட்ட அமைப்பாக சிறிலங்க அரசு அறிவித்துள்ளது.

கொழும்புவில் நேற்று இரவு நடைபெற்ற செய்தியாளர்கள் மாநாட்டில் சிறிலங்க அமைச்சர் மைத்திரிபால சிறிசேனா இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

முன்னதாக, சிறிலங்க அதிபர் மகிந்த ராஜபக்ச தலைமையிலநே‌ற்றநடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் விடுதலைப் புலிகள் இயக்கத்தை தடை செய்வது குறித்து ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த தடை உத்தரவுப்படி, விடுதலைப் புலிகளுடன் எவரும் தொடர்பு வைத்திருக்கக்கூடாது என்று அமைச்சர் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்