பரந்தன் மோதலில் 60 படையினர் பலி

திங்கள், 5 ஜனவரி 2009 (13:17 IST)
கிளிநொச்சியிலிருந்து முல்லைத் தீவை நோக்கி முன்னேறிய சிறிலங்க இராணுவத்தினரை எதிர்கொண்டு விடுதலைப் புலிகள் நடத்திய மோதலில் 60 இராணுத்தினர் கொல்லப்பட்டுள்ளனர், மேலும் 100 பேர் காயமுற்றுள்ளனர்.

கிளிநொச்சி மாவட்டம் பரந்தனில் இருந்து இரண்டாம் கட்டை எனும் இடத்தை நோக்கி சிறிலங்க படையினர் நேற்று காலை மூன்று முனைகளில் முன்னேறத் துவங்கியதாகவும், அவர்களை எதிர்கொண்டு நேற்று பிற்பகல் விடுதலைப் புலிகள் தாக்கியதாகவும், அதில் 60க்கும் மேற்பட்ட இராணுவத்தினர் கொல்லப்பட்டதாகவும், மேலும் 100 பேர் காயமுற்றதாகவும் புலிகள் தெரிவித்துள்ளதாக புதினம் செய்தி தெரிவிக்கிறது.

இந்த மோதலில் கொல்லப்பட்ட சிறிலங்க படையினர் சிலரது உடல்களையும், அவர் போட்டுவிட்டு ஓடிய துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களையும் தாங்கள் கைப்பற்றியுள்ளதாகவும் புலிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே ஆனையிரவு பகுதியை சிறிலங்க இராணுவம் கைப்பற்றி விட்டதாக வந்த செய்திகள் ஆதாரமற்றவை என்று தெரியவந்துள்ளது.

கிளிநொச்சியிலிருந்து முன்னேறிய சிறலங்க இராணுவத்தின் இரண்டு படைப்பிரிவுகள் ஆனையிரவில் இருந்த 2.5 கி.மீ. தூரத்தில்தான் உள்ளன என்று சிறிலங்க படைத்தரப்பு தெரிவித்ததாக அரசு பத்திரிக்கையான டெய்லி நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

ஆனையிரவு கைப்பற்றப்பட்டுவிட்டதாக செய்தி நிறுவனங்களுக்கு தகவல் அளித்தது இந்தியாவின் அயல் உளவு அமைப்பான ‘ரா’ என்று தெரிவந்துள்ளதாக புதினம் செய்தி கூறுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்