பெர்ஸன் ஆஃப் தி இயர்-2008: ஒபாமா தேர்வு

அமெரிக்காவின் 44வது அதிபராக பொறுப்பேற்க உள்ள பராக் ஒபாமா, அந்நாட்டின் டைம் வார இதழின் ‘பெர்ஸன் ஆஃப் தி இயர்-2008’ ஆகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

பொருளாதாரச் சிக்கலில் சிக்கி ஒட்டுமொத்த அமெரிக்காவும் உற்சாகமற்ற சூழலில் காணப்பட்ட தருணத்தில், அதிபர் தேர்தலில் சிறப்பாக திட்டம் வகுத்து நாட்டு மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்றதற்காக அவருக்கு இப்பட்டம் வழங்கப்படுவதாக டைம் இதழ் (Time magazine) தெரிவித்துள்ளது.

ஒபாமாவுக்கு அடுத்தபடியாக 2008ஆம் ஆண்டில் சிறப்பாக செயல்பட்டவர்கள் வரிசையில், அமெரிக்க கருவூல செயலர் ஹென்றி பால்ஸன், பிரான்ஸ் அதிபர் நிக்கோலஸ் சர்கோஸி, குடியரசுக் கட்சியின் துணை அதிபர் வேட்பாளர் சாரா பாலின், 2008 பீஜிங் ஒலிம்பிக்கின் துவக்க மற்றும் நிறைவு நிகழ்ச்சிகளின் இயக்குனரான சீனாவின் ஷாங் யிமோவ் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.