மணிலாவில் திருட்டு கும்பல் மீது துப்பாக்கிச்சூடு: 17 பேர் பலி
பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் காவல்துறையினருக்கும், திருட்டு கும்பலுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் 17 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதுதொடர்பாக இன்று செய்தியாளர்களிடம் பேசிய மணிலா காவல்துறை தலைவர் லியோபோல்டோ படாய்ல், மணிலா புறநகர்ப் பகுதியில் சந்தேகத்திற்கு இடமான 2 கார்களை காவல்துறையினர் துரத்திச் சென்ற போது அதில் இருந்த திருட்டு கும்பலைச் சேர்ந்த ஒருவன் துப்பாக்கியால் சுடத் துவங்கியதாகவும், இதையடுத்து காவல்துறையினரும் பதில் தாக்குதல் நடத்தியதாக தெரிவித்தார்.
காவல்துறையினர், திருட்டு கும்பலுக்கு இடையிலான தாக்குதலில் 12 திருடர்கள், ஒரு காவலர் உயிரிழந்தனர். மேலும், அவ்வழியாகச் சென்று கொண்டிருந்த சிறுமி உட்பட மேலும் 3 பேர் பலியானதாக அவர் கூறினார்.