இந்தியாவிற்கு பாகிஸ்தான் ஒத்துழைக்க வேண்டும்: காண்டலீசா ரைஸ்!

திங்கள், 1 டிசம்பர் 2008 (18:25 IST)
மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதல் தொடர்பான புலனாய்வில் இந்தியாவிற்கு பாகிஸ்தான் அரசு முழுமையாக ஒத்துழைப்பை அளிக்க வேண்டும் என்று அமெரிக்க அயலுறவு அமைச்சர் காண்டலீசா ரைஸ் கூறியுள்ளார்.

நாளை மறுநாள் இந்தியா வரவுள்ள காண்டலீசா ரைஸ், தற்பொழுது இங்கிலாந்து தலைநகர் லண்டனிற்கு வந்துள்ளார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ரைஸ், மும்பையில் பயங்கரவாத தாக்குதல் தொடர்பான ஆதாரங்கள் எங்கே சென்றாலும் அதனை பாகிஸ்தான் புலனாய்வு செய்ய வேண்டும் என்றும், இதில் இந்தியாவிற்கு அந்நாடு முழுமையான ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

“இது தொடர்பாக எந்த முடிவிற்கு இப்போது வருவதற்கில்லை. ஆனால், பயங்கரவாத தாக்குதல் தொடர்பான புலனாய்வில் பாகிஸ்தான் (அரசு) வெளிப்படையாக நடந்துகொள்ள வேண்டும்” என்றும் காண்டலீசா ரைஸ் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்