ஞாயிறு, 30 நவம்பர் 2008 (15:52 IST)
மும்பையில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என்ற நிலையில், இன்று பாகிஸ்தான் பிரதமர், பாகிஸ்தான் அதிபர், ராணுவ தளபதி மற்றும் உயர் அதிகாரிகளின் அவசர ஆலோசனை நடைபெற்றது. பாகிஸ்தான் பிரதமர் கிலானி, அதிபர் சர்தாரி, ராணுவ தளபதி பர்வேஸ் கயானி மற்றும் உயர் அதிகாரிகள் இன்று இஸ்லாமாபாத்தில் சந்தித்துப் பேசினர். பாகிஸ்தான் மீது இந்தியா போர் தொடுத்தால் அதனை எப்படி சமாளிப்பது, படை வீரர்களை இஸ்லாமாபாத் எல்லையில் இருந்து இந்திய எல்லைக்கு மாற்றுவது, எந்த நிலையையயும் எதிர்கொள்ள பாகிஸ்தான் ராணுவம் தயாராக இருப்பது என்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் இந்த கூட்டத்தில் பேசப்பட்டுள்ளன. பாகிஸ்தான் பிரதமர் கிலானி ஹாங்காங்கில் நடைபெறும் மாநாட்டில் கலந்து கொள்ள திட்டமிட்டு இருந்தார். ஆனால் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான பதற்றமான சூழ்நிலை காரணமாக தனது பயணத்தை ரத்து செய்துவிட்டார்.
செயலியில் பார்க்க x