முற்றுகை: பாங்காக்கில் 2 விமானநிலையங்களும் மூடல்

வியாழன், 27 நவம்பர் 2008 (17:14 IST)
தாய்லாந்து அரசுக்கு எதிராகப் போராடி வரும் கிளர்ச்சியாளர்கள் முற்றுகையிட்டதால் தலைநகர் பாங்காக்கில் உள்ள சர்வதேச விமான நிலையம் நேற்று மூடப்பட்ட நிலையில், அந்நகரில் உள்ள உள்நாட்டு விமானநிலையமும் இன்று மூடப்பட்டது.

நேற்று முன்தினம் இரவு பாங்காக்கில் உள்ள ஸ்வர்ணபூமி சர்வதேச விமானநிலையத்தை அரசுக்கு எதிராகப் போராடி வரும் ஜனநாயகத்திற்கான மக்கள் கூட்டணி அமைப்பினர் முற்றுகையிட்டனர். இதையடுத்து நேற்று அவ்விமான நிலையத்தில் போக்குவரத்து முடக்கப்பட்டது.

இந்நிலையில், நேற்றிரவு பாங்காக்கில் உள்ள டான் மியாங் உள்ளூர் விமான நிலையத்தையும் கிளர்ச்சியாளர்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததால், அங்கும் விமானப் போக்குவரத்து இன்று முடக்கப்பட்டது.

அந்நாட்டுப் பிரதமர் சோம்சாய்க்கு எதிராகக் போராடி வரும் ஜனநாயகத்திற்கான மக்கள் கூட்டணி அமைப்பினர் கடந்த சில மாதங்களுக்கு முன் பிரதமர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

பெரு தலைநகர் லிமாவில் நடந்த ஆசிய பசிபிக் நாடுகளின் பொருளாதார ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்று விட்டுத் நாடு திரும்பும் சோம்சாய், நிலையமான டான் மியாங் விமான நிலையத்திற்கு அருகே உள்ள சியாங் மாய் நகரில் தனது அமைச்சரவை கூட்டத்தை நடத்த இருந்த நிலையில், அந்த விமான நிலையத்தை ஆர்ப்பாட்டக்காரர்கள் முற்றுகையிட்டுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்