இலங்கையில் கடும் மழை: 2 லட்சம் பேர் பாதிப்பு!
புதன், 26 நவம்பர் 2008 (20:19 IST)
இலங்கையில் பெய்து வரும் பலத்த மழையினால் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ள உள்ளனர்.
சிறிலங்காப் படையினரின் போர் நடவடிக்கைகள் காரணமாக மடு, மாந்தை கிழக்கு, வவுனியா வடக்கு, பூநகரி, கிளிநொச்சியின் மேற்குப் பகுதிகளில் இருந்து இடம்பெயர்ந்துள்ள இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் தொடர்ச்சியாகப் பெய்து வரும் அடை மழையினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.
பரந்தன் முதல் புதுக்குடியிருப்பு வரையில் இடம்பெயர்ந்த மக்கள் அமைத்திருந்த இடைக்கால வீடுகளுக்குள் மழை வெள்ளம் புகுந்துள்ளதால், இடம்பெயர்ந்த மக்கள் மீண்டும் இடம்பெயர்ந்து பள்ளிகள், கோவில்கள், பொது இடங்களில் தங்கியுள்ளனர்.
இதற்கிடையில், தொடர்ந்து பெய்து வரும் அடைமழை காரணமாக 200க்கும் மேற்பட்ட பள்ளிகள் இயங்கவில்லை. இதனால் 50,000க்கும் மேற்பட்ட மக்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது.