இந்தியா-பாக். இணையவழி யுத்தம்: “ஹேக்கர்”கள் கைவரிசை!

இந்தியா, பாகிஸ்தானில் உள்ள அரசு நிறுவனங்களின் இணையதளங்களை பாழ்படுத்தும் வேலையில் இரு நாடுகளைச் சேர்ந்த “ஹேக்கர”கள் (hackers) தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

இதில் குறிப்பிடத்தக்க விஷயம் தகவல்களை திருடும் களவுப் பணியில் ஹேக்கர்ஸ் ஈடுபட்டாலும், அதிலும் அவர்களது தேசப்பற்றை வெளிப்படுத்துகின்றனர்.

இந்தியா-பாகிஸ்தான் இணையவழி யுத்தம் (ஹேக்கர் பிரச்சனை) நவம்பர் மத்தியில் துவங்கியது. முதலில் இந்தியாவைச் சேர்ந்த கார்ட்ஸ் ஆஃப் ஹிந்துஸ்தான் (Guards of Hindustan) என்ற ஹேக்கர் குழுவினர் பாகிஸ்தானின் எண்ணெய், எரிவாயு கட்டுப்பாட்டு ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை முடக்கினர்.

இதற்கு பதிலடி தரும் விதமாக பாகிஸ்தானைச் சேர்ந்த சைபர் ஆர்மி (Pakistan Cyber Army) ஹேக்கர் குழுவினர், இந்தியாவின் எண்ணெய், இயற்கை எரிவாயுக் கழகத்தின் (ONGC) இணையதளத்தை நேற்று முடக்கினர்.

இதேபோல் இந்திய ரயில்வே, ரட்லம் பகுதியில் உள்ள கேந்திரிய வித்யாலயா ஆகியவற்றின் அதிகாரப்பூர்வ இணைய தளங்களும் சைபர் ஆர்மி ஹேக்கர் குழுவால் முடக்கப்பட்டதாகவும், இதன் காரணமாக அந்த 3 தளங்களுக்கும் இணைப்பு கிடைக்கவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையறிந்த கார்ட்ஸ் ஆஃப் ஹிந்துஸ்தான் ஹேக்கர் குழுவினர் உடனடியாக ONGC இணையத்தை உடனடியாக மீட்டது. அதனைத் தொடர்ந்து இந்திய ரயில்வேயின் அதிகாரப்பூர்வ இணையதளத்தையும் மீண்டும் செயல்பட வைத்தது.

வெப்துனியாவைப் படிக்கவும்