நியூசிலாந்து தீவுப்பகுதியில் கடு‌ம் நிலநடுக்கம்!

புதன், 26 நவம்பர் 2008 (04:50 IST)
நியூசிலாந்தின் தென்பகுதியில் அமைந்துள்ள கெர்மடே தீவுகளில் செவ்வாய்க்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6 பு‌ள்‌ளிகளாக ப‌திவா‌கி உ‌ள்ளது.

ப‌சி‌‌பி‌‌க் பெரு‌ங்கட‌லி‌ல் 35 ‌கி.‌மீ. ஆழ‌த்‌தி‌ல் மைய‌ம் கொ‌ண்டு இ‌ந்த ‌நிலநடு‌க்க‌‌ம் ஏ‌ற்ப‌ட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது.

எனினும் இ‌ந்த ‌நிலநடு‌க்க‌த்தா‌ல் ஏ‌ற்ப‌ட்ட உ‌யி‌ர்‌ச்சேத‌ம், பொரு‌ட்சேத‌ம் கு‌றி‌த்த தக‌வ‌ல்க‌ள் உடனடியாக தெ‌ரி‌ய‌வி‌ல்லை. சுனாமி எச்சரிக்கை அறிவிப்பு விடுக்கப்படவில்லை.

கடந்த 2 மாதங்களில் இப்பகுதியில் ஏற்பட்ட 3-வது நிலநடுக்கம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்