ஏமன் கப்பலைப் கடத்தி கடற்கொள்ளையர்கள் கைவரிசை!

செவ்வாய், 25 நவம்பர் 2008 (16:53 IST)
ஏடன் வலைகுடா பகுதியில் வழியாக பயணித்துக் கொண்டிருந்த ஏமன் நாட்டுக்கு சொந்தமான சரக்குக் கப்பலை சோமாலியா கடற்கொள்ளையர்கள் இன்று கடத்தியுள்ளனர்.

கடத்தப்பட்ட கப்பல் ஏமன் நாட்டில் உள்ள எம்.வி.அமனி என்ற நிறுவனத்திற்கு சொந்தமானது என கிழக்கு ஆப்ரிக்க பகுதிக்கான கடற்கொள்ளையர் தடுப்பு உதவி அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வன்குரா தெரிவித்தார்.

இந்தியப் பெருங்கடல், பசிபிக் கடல் மற்றும் மத்திய தரைக்கடல் பகுதிகளை இணைக்கும் முக்கிய வர்த்தக இடமாக சூயஸ் கால்வாய் திகழ்கிறது.

சூயஸ் கால்வாய்க்குள் செல்வதற்காக ஏடன் வளைகுடா பகுதி வழியாக செல்லும் சரக்குக் கப்பல்களை சோமாலியாவைச் சேர்ந்த கடற்கொள்ளையர்கள் கடத்துவதுடன், அதில் உள்ள பயணிகள், பொருட்களை பிணையமாக வைத்து கப்பல் நிறுவனங்களிடம் அதிக தொகை கேட்டு மிரட்டல் விடுக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்