கோஸி அணை: பிரணாப்- பிரச்சண்டா பேச்சு!

செவ்வாய், 25 நவம்பர் 2008 (13:05 IST)
நேபாளத்திற்கு 3 நாள் அரசுமுறைப் பயணமாக சென்றுள்ள அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி, அந்நாட்டுப் பிரதமர் பிரச்சண்டாவை இன்று காட்மாண்டுவில் சந்தித்துப் பேசினார்.

இதுகுறித்து நேபாள பிரதமரின் சிறப்பு ஆலோசகர் பஹதூர் தப்பா கூறுகையில், பிரணாப்-பிரச்சண்டா இடையிலான சந்திப்பு மிகவும் ஆக்கப்பூர்வமான, பலனளிக்கும் வகையில் இருந்ததாகத் தெரிவித்தார்.

சுமார் 40 நிமிடங்கள் நீடித்த இப்பேச்சுவார்த்தையின் போது நேபாளம் விரும்பும் வகையில் அதன் அரசியல் விவகாரங்கள் அமையத் தேவையான நடவடிக்கைளுக்கு இந்தியா உதவிபுரியும் என பிரணாப் உறுதியளித்ததாகத் தெரிகிறது.

கோஸி அணையில் ஏற்பட்டுள்ள விரிசலால் இருநாட்டு எல்லையில் உள்ள பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்படுவது குறித்தும் இரு தலைவர்களும் அப்போது விவாதித்ததுள்ளனர்.

கோஸி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணையில் மேற்கொள்ளப்பட்டு வரும் சீரமைப்புப் பணிகள் அடுத்தாண்டு மார்ச் மாதம் முடிவடையும் என பிரச்சண்டா, அமைச்சர் பிரணாப்பிடம் உறுதியளித்ததாகவும் தப்பா தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்