எல்லை வர்த்தகம்: மேலும் 100 பொருட்களை சேர்க்க பாக். திட்டம்!

இந்திய-பாகிஸ்தான் எல்லை வர்த்தகத்தில் விற்கப்படும் பொருட்களின் பட்டியலில் மேலும் 100 பொருட்களை சேர்க்க பாகிஸ்தான் அரசு திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக பாகிஸ்தான் வர்த்தக அமைச்சக அதிகாரிகளை மேற்கோள்காட்டி வெளியாகியுள்ள செய்தியில், புதிதாக சேர்க்கப்பட உள்ள பொருட்கள் குறித்த பணிகளை ஆய்வு செய்யும்படி வருவாய் பெடரல் வாரியத்திற்கு அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இந்தியாவுடனான வர்த்தகத்தை வலுப்படுத்தும் விதமாக மேலும் பல நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் பாக். அரசு திட்டமிட்டு வருவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். தற்போதைய நிலவரப்படி இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் 2.12 பில்லியன் என்ற அளவில் உள்ளது.

காஷ்மீர் எல்லைப்பகுதியில் இருநாட்டு அரசுகளும் கடந்த மாதம் எல்லை வர்த்தகத்தைத் மீண்டும் துவக்கின. முதற்கட்டமாக 21 பொருட்கள் விற்பனை செய்வதற்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்ட நிலையில் மேலும் 100 பொருட்களை புதிதாக சேர்க்க பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்