விடுதலைப் புலிகளின் முக்கிய கடற்படை தளமாக கருதப்படும் பூநகரியை கைப்பற்றி விட்டதாக இலங்கை ராணுவம் அறிவித்துள்ளது.
வடக்கு இலங்கையில் உள்ள பூநகரிக்குள் ராணுவத்தின் சிறப்புப் படைப் பிரிவு நுழைந்து, தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்திருப்பதாக அந்நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சக அதிகாரி ஒருவர் கூறினார்.
என்றாலும் இதுதொடர்பாக மேலும் விவரம் ஏதும் தெரிவிக்கப்படவில்லை.
ராணுவத்தின் மிக முக்கியத் தளமாக விளங்கிய பூநகரியை கடந்த 1993 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் கடும் தாக்குதல் நடத்தி கைப்பற்றினர். அப்போது முதல் இது புலிகள் வசமே இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.
இதன்காரணமாக இலங்கையின் வடமேற்குப் பகுதி ராணுவத்தின் கட்டுப்பாட்டில் வந்துள்ளது.