ஒபாமாவால் மாற்றங்கள் ஏற்படாது - பிடல் கேஸ்ட்ரோ!

சனி, 15 நவம்பர் 2008 (13:02 IST)
கியூபாவின் முன்னாள் அதிபர் பிடல் கேஸ்ட்ரோ, அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள அதிபர் மாற்றத்தால் எந்தவித மாற்றமும் ஏற்படப்போவதில்லை என்று ஒபாமா என்ற பெயரைக் குறிப்பிடாமல் கூறியுள்ளார்.

அரசுக் கட்டுப்பாட்டில் உள்ள இணையதளத்தில் வெளியான கட்டுரை ஒன்றில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

பெயரை குறிப்பிடாமல் அவர் அதில் மறைமுகமாக ஒபாமாவை பாராட்டவும் செய்துள்ளார். அதாவது, "ஒரு அறிவார்‌ந்த நபரின் நல்ல நோக்கங்கள் பல நூற்றாண்டுகள் ஊறிப்போன நலன்களையும், சுயநலத்தன்மைகளையும் மாற்றிவிட முடியும் என்று நம்புவது வெகுளித்தனமானது" என்று எழுதியுள்ளார்.

அதேபோல் வெறும் தலையை மட்டும் மாற்றிவிட்டால் அமெரிக்கா மேலும் சகிப்புத் தன்மையுடனும், போர்களை அறவே விட்டுவிடும் என்றும் பலர் கூறிவருகின்றனர். ஆனால் எந்தவித மற்றமும் ஏற்படாது என்று அந்தக் கட்டுரையில் அவர் எழுதியுள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு பல நாட்கள் இருக்கும்போது பிடல் கேஸ்ட்ரோ எழுதிய மற்றொரு கட்டுரையில், மெக்கெ‌ய்னை விட ஒபாமா புத்திகூர்மையுள்ளவர் என்றும், போர் வெறியர் கிடையாது என்றும் குறிப்பிட்டிருந்ததோடு, அமெரிக்க வெள்ளை நிறவெறி ஆதிக்கம் அவரை வெள்ளை மாளிகைக்குச் செல்வதிலிருந்து தடுக்கும் என்றும் கூறியிருந்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்