இந்தியா-ஓமன் 3 ஒப்பந்தங்கள் கையெழுத்து!

ஞாயிறு, 9 நவம்பர் 2008 (02:10 IST)
பிரதமர் மன்மோகன் சிங் வளைகுடா நாடுகளில் 3 நாள் அரசு முறைப் பயணத்தின் முதல்கட்டமாக நேற்று ஓமன் சென்றார்.

ஓமன் நாட்டு துணை பிரதமர் சயீத் பக்த் பின் முகமதுவை பிரதமர் மன்மோகன்சிங் தலைமையிலான இந்தியக் குழுவினர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

பேச்சுவார்த்தையின் முடிவில் இரு நாடுகளுக்கும் இடையே முதலீட்டு நிதிய செயலாக்கம் உள்ளிட்ட 3 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

ஓமனில் பணிபுரியும் ஏராளமான இந்தியர்களின் பாதுகாப்புக்கும், இந்தியர்களின் உழைப்பு அந்த நாட்டு முதலாளிகளால் சுரண்டப்படுவதைத் தடுக்க வகை செய்யும் சமூக பாதுகாப்பு ஒப்பந்தமும் அவற்றில் குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்