ஒபாமாவின் பதவிக் காலத்தில் அமெரிக்கா - இந்தியா இடையேயான உறவு மேலும் வலுப்பெறும் என்ற நம்பிக்கை உள்ளதாக, ஜனநாயக கட்சியைச் சேர்ந்த அமெரிக்க வாழ் இந்தியத் தலைவர் சாண்ட் சிங் சத்வால் கூறினார்.
உலகச் சூழல் குறித்து நன்கு அறிந்தவர் பராக் ஒபாமா. எனவே, அவர் துணை அதிபர் ஜோசப் பிடனுடன் இணைந்து தற்போதைய உலகச் சூழலுக்கு ஏற்றவாறு செயல்படுவார் என்றும் அவர் தெரிவித்தார்.
ஒபாமாவின் தேர்தல் பிரசாரத்துக்காக அதிகமான நிதி திரட்டிக் கொடுத்தவர் சாண்ட் சிங் சத்வால் என்பது குறிப்பிடத்தக்கது.
தவிர, ஒபாமாவின் வெற்றிக்கு மேலும் பல அமெரிக்க வாழ் இந்தியர்கள் அமைப்புகளும் பாராட்டு தெரிவித்துள்ளன.