ஈராக்கில் அடுத்தடுத்து நிகழ்ந்த 2 குண்டுவெடிப்புகளில் 15-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஏராளமானோர் காயம் அடைந்தனர்.
தலைநகர் பாக்தாத்தில் பேருந்து நிலையம் மற்றும் சந்தை பகுதியில் குண்டுவெடிப்பு நிகழ்ந்ததால், பெரும் பரபரப்பு நிலவியது.
மக்கள் அதிகம் கூடும் இடங்களில் நிகழ்ந்துள்ள குண்டுவெடிப்பில் 15-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாகவும், காயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த குண்டுவெடிப்பிற்கு எந்தவொரு அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை.