அமெரிக்க அதிபராகிறார் பராக் ஒபாமா?

செவ்வாய், 4 நவம்பர் 2008 (22:39 IST)
அமெரிக்காவில் மிகவும் பரபரப்பாக எதிர்பார்க்கப்படும் அதிபர் பதவிக்கான தேர்தல் தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த பராக் ஒபாமா, புதிய அதிபராவது ஏறக்குறைய உறுதியாகி உள்ளது.

டிக்ஸ்வில்லி நோட்சில் அடங்கிய நியூஹாம்ஷயர் பகுதியில் மொத்தம் 21 வாக்குகளில் 15 வாக்குகளைப் பிடித்து ஒபாமா ஏற்கனவே வெற்றிபெற்றுள்ளார்.

குடியரசுக் கட்சியைச் சேர்ந்த ஜான் மெக்கெய்ன் இப்பகுதியில் வெறும் 6 வாக்குகளையே பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

நியூயார்க் மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

அனைத்து மாகாணங்களிலும் சேர்த்து மொத்தம் 538 வாக்குகளில் குறைந்தது 270 வாக்குகள் கிடைத்தாலே போதும். அவர் அதிபராகி விடலாம்.

வெள்ளை மாளிகைக்கு தேர்வு செய்யப்படவிருக்கும் முதல் கறுப்பர் என்ற பெருமையை ஒபாமா பெறுவார் என ஏற்கனவே தகவல்கள் வெளியாகி உள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்