பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதியில் உள்ள மின்கோர காவல்நிலையத்தின் மீது நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் 2 காவல்துறையினர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஸ்வாட் பள்ளத்தாக்குப் பகுதியில் உள்ள மின்கோர காவல்நிலையத்தின் மீது இன்று அதிகாலை கார் வெடிகுண்டு மூலம் தற்கொலைப்படை தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதாக காவல்துறை அதிகாரி ஓமர் தாரிக் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
இதற்கிடையில், இத்தாக்குதலில் 4 பேர் உயிரிழந்ததாக மற்றொரு அதிகாரி கூறியதாக தகவல்கள் வெளியாகின்றன. இத்தாக்குதலில் காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.