டெ‌ல்‌லி குண்டுவெடிப்பு : பான் கி-மூன் கண்டனம்!

ஞாயிறு, 28 செப்டம்பர் 2008 (15:36 IST)
தெற்கு டெல்லியில் நேற்று நடந்த குண்டு வெடிப்பில் மூன்று பேர் கொல்லப்பட்டதை அடுத்து ஐ.நா. பொதுச் செயலர் பான் கி-மூன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்!

இந்தியாவின் முக்கிய நகரங்களில் மக்களை குறிவைத்து அடுத்தடுத்து தாக்குதல் நடத்தப்படுவது கவலையளிப்பதாகக் கூறியுள்ள பான் கி-மூன், பயங்கரவாதத்தை எந்தவிதத்திலும் நியாயப்படுத்த முடியாது என்று கூறியுள்ளார்.

மேலும், குண்டு வெடிப்பில் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்திற்கும், காயமடைந்தவர்களுக்கும், இந்திய மக்களுக்கும் ஆறுதலை தெரிவித்துக் கொள்வதாகவும் பான் கி-மூன் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்