அமெரிக்காவில் இருந்து பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மன்மோகன்!

சனி, 27 செப்டம்பர் 2008 (17:31 IST)
அமெரிக்க அரசுமுறைப் பயணத்தை வெற்றிகரமாக முடித்த பிரதமர் மன்மோகன்சிங், இந்திய-ஐரோப்பிய கூட்டுறவு மாநாடு, இந்திய-பிரான்ஸ் மாநாடு ஆகியவற்றில் பங்கேற்பதற்காக பிரான்ஸ் புறப்பட்டுள்ளார்.

கடந்த 25ஆம் தேதி வாஷிங்டனில் அதிபர் புஷ்ஷை சந்தித்த பிரதமர், ஐக்கிய நாடுகளின் பொதுக்குழு கூட்டத்திலும் பங்கேற்று உரையாற்றினார்.

இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்திற்கு அமெரிக்க நாடாளுமன்றம் இன்னும் அனுமதி வழங்காததால், புஷ் உடனான சந்திப்பின் போது இரு தலைவர்களும் அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை என்றாலும் பிரதமரின் அமெரிக்க பயணம் வெற்றிகரமாக நிறைவடைந்ததாகவும் இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இன்று பிரான்ஸ் செல்லும் பிரதமர் வரும் 29ஆம் தேதி அந்நாட்டின் மர்செய்லியில் நடக்கும் இந்திய-ஐரோப்பிய கூட்டுறவு மாநாடில் பங்கேற்கிறார். இதன் பின்னர் 30ஆம் தேதி நடைபெறும் இந்திய-பிரான்ஸ் மாநாட்டில் கலந்து கொள்ளும் பிரதமர், அன்றைய தினமே பிரான்ஸ் அதிபர் நிக்கோலஸ் சர்கோஸியைச் சந்திக்கிறார்.

வெப்துனியாவைப் படிக்கவும்