நாளை முழு சூரியகிரகணம் ஏற்படுகிறது. இதை இந்தியா உள்பட உலகம் முழுவதும் பார்க்கலாம். இந்தியாவில் இந்த கிரகணம் பகுதி அளவே தெரியும். அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு அமைப்பான நாசா இந்த முழு சூரியகிரகணத்தை நேரடியாக ஒளிபரப்ப ஏற்பாடுகளை செய்துள்ளது.
நாசா, சான் பிரான்சிஸ்கோவின் ஆராய்ச்சி அறிவியல் மையம், பெர்கேலேயில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகம் ஆகியவற்றுடன் இணைந்து இந்த முழு சூரிய கிரகணத்தை நேரடியாக ஒளிபரப்ப தேவையான ஏற்பாடுகளை செய்துள்ளது.
கனடா, வடக்கு கிரீன்லாந்து, ஆர்க்டிக், மத்திய ரஷ்யா, மங்கோலியா, சீனா ஆகிய பகுதிகளில் இந்திய நேரப்படி மாலை 3.30 மணி முதல் 5.45 மணி வரை தெரிய உள்ள முழு சூரியகிரகண காட்சிகளை நாசா தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
இந்த நேரடி ஒளிபரப்பில், முழு சூரியகிரகணத்தின் போது, தொலைநோக்கி வழியாக பார்க்கப்பட்டு அதனை நேரடியாக விளக்கவும் ஏற்பாடுகளை செய்துள்ளது.