பாகிஸ்தானின் ஹங்கு, பாரா மாவட்டங்களில் நடந்த தேடுதல் வேட்டையில், அல் கய்டா அமைப்பைச் சேர்ந்த 40 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு பிரதமரின் அரசியல் ஆலோசகர் ரெஹ்மான் மாலிக் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தி டெய்லி டைம்ஸ் நாளிதழுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், அல்கய்டா தீவிரவாத அமைப்பின் அஜ்மத், ரஃபி ஆகியோர் உட்பட 40 பயங்கரவாதிகளை கைது செய்யும் பணியில் 17 பாதுகாப்புப் படை வீரர்கள் உயிரிழந்ததாக அவர் குறிப்பிட்டார்.
பஞ்சாப், சிந்து மாகாணங்களில் தற்கொலைத் தாக்குதல் கட்டுக்குள் வந்துள்ளதாகவும், வடமேற்கு எல்லப்புற மாகாண பகுதியில் இது 80 விழுக்காடு வரை கட்டுப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அரசு கட்டுப்பாட்டில் உள்ள பழங்குடியினப் பகுதியில் நிலவும் பிரச்சனைகளுக்கு பேச்சுவார்த்தை மூலமாக தீர்வு காணவே தமது அரசு விரும்புவதாகவும் ரெஹ்மான் மாலிக் கூறியுள்ளார்.