பன்னாட்டு அணுசக்தி முகமை - ஐஏஇஏவுடன் இந்தியா செய்து கொள்ளவிருக்கும் தனித்த கண்காணிப்பு ஒப்பந்தத்தில் இடம்பெற்றுள்ள அம்சங்கள் அடங்கிய வரைவை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின்படி, பன்னாட்டு அணு சக்தியில் இடம்பெற்றுள்ள உறுப்பு நாடுகளுடன் இந்தியா சிவில் அணுசக்தி ஒத்துழைப்பை ஏற்படுத்திக் கொள்ளும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் உள்ள அணு உலைகளுக்கு அவற்றின் வாழ்நாள் முழுவதற்கும் தடையின்றி அணு எரிபொருள் கிடைப்பதற்கும், கையிருப்பை உறுதி செய்வதற்குமான இந்தியாவின் முயற்சிக்கு இந்த கண்காணிப்பு ஒப்பந்தம் வகை செய்கிறது.
உள்நாட்டில் உள்ள அணு உலைகளுக்கு வெளிநாடுகளில் இருந்து எரிபொருள் தடையின்றி வழங்கப்படுவதை உறுதி செய்வதற்கான திருத்த நடவடிக்கைகளையும் இந்தியா எடுக்கக்கூடும் என்றும் தெரிய வந்துள்ளது.