ஈரா‌க் கா‌ர் கு‌ண்டுவெடி‌ப்‌பி‌ல் 51 பே‌ர் ப‌லி!

புதன், 18 ஜூன் 2008 (15:30 IST)
பாக்தாத்: ஈராக் தலைநகர் பாக்தாத்தில் நெரிசலான தெரு ஒன்றில் கார் குண்டு வெடித்தது. இதில் 51 பேர் கொல்லப்பட்டனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.

கார் குண்டு வெடித்ததால் ஏற்பட்ட தீயிற்கு பயந்து மக்கள் தங்கள் குடியிருப்புகளிலேயே முடங்கினர். சுமார் 70க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருக்கலாம் என்று ஈராக் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடந்த மே 11-ஆம் தேதி ஷியா முஸ்லிம் தீவிரவாதிகளுக்கும், அமெரிக்க, ஈராக் படையினருக்கும் இடையே போர் நிறுத்த உடன்படிக்கை ஏற்பட்ட பிறகு இப்போது இந்த கார் குண்டு வெடித்துள்ளது.

மேற்கு பாக்தாத்தில் உள்ள சந்தை ஒன்றின் பேருந்து நிறுத்தம் அருகே இந்த கார் குண்டு வெடித்தது.

கடந்த மார்ச் 6-ஆம் தேதி 68 உயிர்களை பலி வாங்கிய இரட்டைக் குண்டுவெடிப்பிற்கு இப்போது இந்த கார் குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்