தோஹா பேச்சுவார்த்தை- இந்தியா மீது அமெரிக்கா குற்றச்சாட்டு!

புதன், 11 ஜூன் 2008 (19:46 IST)
உலக வர்த்தக அமைப்பிற்காக தோஹாவில் நடந்து வரும் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத வகையில் இந்தியா திரைக்குப் பின் செயல்படுவதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.

உலக வர்த்தக அமைப்பில் நடத்தப்படும் பேச்சுவார்த்தை நன்கொடையாளர்களின் மாநாடு அல்ல. இதில் உடன்பாடு எட்ட பொறுப்புகளை சுமக்கும் வகையில் பொருளாதார வலிமை வேண்டும் என்று இந்தியாவை, அமெரிக்கா மறைமுகமாக தாக்கியுள்ளது.

தோஹாவில் நடந்து வரும் பேச்சுவார்த்தையில் விவசாய உற்பத்தி பொருட்களுக்கு மானியம் வழங்குவதிலும், அமெரிக்கா போன்ற முன்னேறிய நாடுகள், இந்தியா போன்ற வளரும் நாடுகளுக்கு சந்தையை திறந்து விடுவதில் உடன்பாடு எட்ட முடியாமல் இழுபறியில் உள்ளது.

தோஹா பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டுவதற்கு கூறப்படும் எல்லா ஆலோசனைகளையும் மற்ற வளரும் நாடுகள் ஏற்றுக் கொள்ள விடாமல் இந்தியா எதிர்த்துவருகிறது. தோஹாவில் உடன்பாடு ஏற்படும் சூழ்நிலையில, இந்தியாவின் எதிர்ப்பினால் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது என்று அமெரிக்காவின் சர்வதேச வர்த்தக இணை அமைச்சர் கிறிஸ்டோபர்.ஏ.பாடிலா குற்றம் சாட்டினார்.

இந்தியாவின் எழுச்சி: 21 ஆம் நூற்றாண்டில் கூட்டு மற்றும் பொறுப்பு என்ற தலைப்பில் ஹெரிடேஜ் பவுன்டேசன் நடத்திய கருத்தரங்கில் பாடிலா உரையாற்றினார்.

அப்போது அவர், இந்தியாவின் மற்ற வளரும் நாடுகளின் சந்தையை உற்பத்தி பொருட்கள், விவசாயம் மற்றும் சேவை துறைகளில் முன்னேறிய நாடுகளுக்கு திறந்து விடாமல் பாதுகாக்கபட வேண்டும் என்று இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

இந்தியா பாசுமதி அல்லாத மற்ற ரக அரிசி, சமையல் எண்ணை ஏற்றுமதிக்கு தடை விதித்தன் மூலம் இந்தியா உலக அளவிலான உணவு தானிய சந்தையில் நெருக்கடி ஏற்படுத்தியது என்று பாடிலா குற்றம் சாட்டினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்