வவுனியாவில் மோதல் : 4 படையினர் பலி!

ஞாயிறு, 8 ஜூன் 2008 (13:03 IST)
இலங்கையின் வவுனியாவில் உள்ள குஞ்சுக்குளம் எனும் பகுதியில் சிறிலங்கப் படையினருக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே நே‌ற்று நடந்த மோதலில் சிறிலங்க படையினர் 4 பேர் கொல்லப்பட்டனர். 7 பேர் காயமடைந்துள்ளனர்.

இத்தகவலை தமிழீழ விடுதலைப் புலிகளின் ராணுவப் பேச்சாளர் ராசையா இளந்திரையன் தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள வவுனியாவின் வடமேற்கு குஞ்சுக்குளம் பகுதியில் சிறிலங்கப் படையினர் மும்முனைகளில் முன்னேறியதாகவும், இதனை எதிர்த்து விடுதலைப் புலிகள் நடத்திய முறியடிப்புத் தாக்குதலில் படையினர் பின்வாங்கி சென்றுவிட்டதாகவும் இளந்திரையன் கூறியுள்ளார்.

இம்மோதலின் போது சிறிலங்க படையினர் 4 பேர் கொல்லப்பட்டனர் என்றும், 7 பேர் காயமடைந்தனர் என்றும் இளந்திரையன் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்