மூன்று இந்திய தொழிலதிபர்களுக்கு பிரிட்டனில் சிறை!

வெள்ளி, 6 ஜூன் 2008 (14:10 IST)
பிரிட்டனிலும், அமெரிக்காவிலும் வங்கிகளில் மோசடி செய்து ஏகப்பட்ட தொகைகளை சுருட்டியதாக 3 என்.ஆர்.ஐ. தொழிலதிபர்களுக்கு பிரிட்டன் நீதிமன்றம் 25 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளது.

39 வயதான விரேந்திர ரஸ்தோகி, 43 வயதான ஆனந்த் ஜெயின், 57 வயதான கவுதம் மஜூம்தார் ஆகிய இந்த 3 பேரும் ஆர்.பி.ஜி. சோர்சஸ் என்ற உலோக வர்த்தக நிறுவனத்தை நடத்தி வந்தனர்.

இவர்கள் பல ஆண்டுகளாக அமெரிக்கா மற்றும் பிரிட்டனில் உள்ள வங்கிகள், உலோக பரிமாற்ற நிறுவனங்கள் மற்றும் மதிப்பிற்குறிய கணக்குப்பதிவியல் நிறுவனங்கள் ஆகியவற்றை ஏமாற்றி ஏகப்பட்ட தொகைகளை சுருட்டியுள்ளனர் என்று நீதிமன்றம் கடந்த 23ஆம் தேதி குற்றம்சாட்டியது.

அதாவது இல்லாத ஒரு 324 போலி நிறுவனங்கள் பேரில் போலி ஆவணங்களை தயாரித்து வங்கிகளிலிருந்து கடன்களை பெற்றுள்ளனர்.

இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி ஜேம்ஸ் வாட்ஸ்வொர்த், ரஸ்தோகிக்கு ஒன்பதரை ஆண்டுகளும், ஜெயினுக்கு எட்டரை ஆண்டுகளும், மஜும்தாருக்கு ஏழரை ஆண்டுகளும் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

சர்வதேச விசாரணை கழகமான தீவிர மோசடி அலுவலக விசாரணை அதிகாரிகள் இந்த மோசடியை அம்பலப்படுத்தியுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்