சிறிலங்காவில் வெள்ளத்திற்கு 5 பேர் பலி!
திங்கள், 2 ஜூன் 2008 (17:25 IST)
சிறிலங்காவில் பெய்துவரும் தென்-மேற்குப் பருவமழையால் ஏற்பட்டுள்ள வெள்ளத்திற்கு 5 பேர் பலியாகியுள்ளதுடன், 30,000 க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சிறிலங்காவின் தென் மாவட்டங்களான கால்லே, கலுத்தாரா, ரட்னபுரா, கொழும்பு மற்றும் மத்திய மலைப் பகுதிகளில் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளதாக கொழும்பு பேரிடர் மேலாண்மை மையம் தெரிவிக்கிறது.
ரட்னபுராவில் 4,000 குடும்பங்களும், கால்லேவில் 1,500 குடும்பங்களும், கலுத்தாராவில் 3,150 குடும்பங்களும் வெள்ளத்தினால் அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளன. கொழும்பு மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் 1,700 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
ஹாட்டன், நவல்பிட்டியா மலைப் பகுதிகளில் மண்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. முக்கியச் சாலைகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் போக்குவரத்தும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது என்று தமிழ்நெட் இணைய தளம் தெரிவிக்கிறது.