மியான்மார் பலி 1,28,000-செஞ்சிலுவைச் சங்கம்!

வியாழன், 15 மே 2008 (11:52 IST)
யாங்கூன்: மியான்மாரைத் தாக்கிய நர்கீஸ் புயலுக்கு பலியானோர் எண்ணிக்கை 1,28,000 ஆக இருக்கலாம் என்று செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது. இது அரசு தரப்பு வெ‌ளி‌யி‌ட்ட பலி எண்ணிக்கையைககாட்டிலும் அதிகமானது என்பது குறிப்பிடத்தக்கது.

புயல் நிவாரண மீட்புப் பணிகளுக்காக வரும் அயல் நாட்டு நிபுணர்கள் ஒரு சிலருக்கே மியான்மாரின் ராணுவ ஆட்சி விசா அளித்துள்ளது. பல இடங்களுக்கு இன்னமும் நிவாரணப் பொருட்கள் போய்ச் சேரவில்லை.

மேலும் நிவாரணத்திற்காக அனுப்பப்படும் உணவுப் பொருட்களில் நல்ல தரம் உள்ள உணவுப் பொருட்கள் ராணுவ கிட்டங்கி‌ற்கு செல்வதாகவும், அதற்கு பதிலாக உள்ளூரில் தயாரிக்கப்பட்ட மோசமான உணவுப் பொருட்கள் மக்களுக்கு நிவாரணமாக செல்கின்றன என்றும் ஐ.நா.விற்கு வந்துள்ள அதிகாரபூர்வமற்ற செய்தி ஒன்று தெரிவித்துள்ளது.

மேலும் புயலால் பதிக்கப்பட்ட இர்ரவாடி ஆற்று டெல்டா பகுதிகளில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வரு‌கிறது. ‌அதனா‌ல் அ‌ங்கு ‌மீ‌ட்பு‌ப் ப‌‌ணிக‌ள் பா‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது. அ‌ப்பகு‌தி‌யி‌ல் ம‌ட்டு‌ம் 25 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு உணவு, குடி நீர் மற்றும் இருப்பிட வசதிகள் இல்லாம‌ல் த‌வி‌‌த்து வரு‌கி‌ன்றன‌ர்.

நிவாரணப் பொருட்களை மியான்மார் ராணுவ அரசு தொடர்ந்து அனுமதிக்காம‌ல் இரு‌ந்தா‌ல் அ‌ங்கு இரண்டாவது பேரழிவு ஏற்படும் என்று ஐ.நா. எச்சரித்துள்ளது. இன்னமும் இரண்டு நாட்களுக்கு இந்த நிலை நீடித்தால் அங்கு மக்கள் நோயினால் உயிரிழக்கும் அபாயம் உள்ளது என்று யூனிசெஃப் கூறியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்