இது தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகள் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "சிறிலங்காப் படையினரையும், ஆயுதங்களையும் ஏற்றிச் செல்லக்கூடிய படையினரின் கப்பல் ஏ-520 இன்று சனிக்கிழமை அதிகாலை 2:23 மணியளவில் தாக்கியழிக்கப்பட்டு உள்ளது.
இத்தாக்குதலை கடற்புலிகளின் கங்கை அமரன் நீரடி நீச்சல் பிரிவின் கடற் கரும்புலிகள் நடத்தியுள்ளனர்.
கொழும்பில் இருந்து காங்கேசன்துறைக்கும் காங்கேசன்துறையில் இருந்து கொழும்புக்கும் சிறிலங்காப் படையினரையும், படையினருக்கான ஆயுதங்கள், படைப் பொருட்கள் மற்றும் வெடிபொருட்களையும் ஏற்றி- இறக்கும் பணியில் இக்கப்பல் ஈடுபட்டு வந்தது.
கடந்த 2007 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளின் கப்பல்களை தாக்கியழிக்கும் முழுமையான பணியிலும் இக்கப்பல் ஈடுபட்டிருந்தது.
யாழ். குடாநாட்டுப் படையினருக்கான வெடிபொருட்கள் ஏற்றப்பட்ட நிலையில் தாக்கியழிக்கப்பட்ட இக்கப்பல் 80 மீட்டர் நீளம் கொண்டது" என்று கூறப்பட்டுள்ளது.