இந்த மசோதாவின் மூலம் , நெல்சன் மண்டேலாவும், அவரது ஆஃப்ரிக்கன் தேசிய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தலைவர்களும் பயங்கரவாதிகள் பற்றிய அனைத்து புள்ளிவிவர பட்டியல்களில் இருந்தும் நீக்கப்படுவார்கள்.
இத்தகவலை அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையின் அயலுறவு விவகாரங்களுக்கான குழுத் தலைவர் பெர்மன் தெரிவித்தார்.
1970, 80 ஆம் ஆண்டுகளில் தென் ஆப்பிரிக்காவின் ஆளும் சிறுபான்மை வெள்ளை இனத்தவர்கள் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியை பயங்கரவாத அமைப்பு என்று முத்திரை குத்தியது, அதனை அப்படியே அமெரிக்கா உள்ளிட்ட பிற நாடுகள் சிந்தனையின்றி கடைபிடித்து வந்தன.
இதனால் நெல்சன் மண்டேலா உட்பட ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியின் பிற உறுப்பினர்களும் அமெரிக்காவில் நுழைய சிறப்பு அனுமதி பெறவேண்டும் என்ற நிலை உருவானது.
இது குறித்து அமெரிக்க வெளியுறவு அமைச்சர் காண்டலீசா ரைஸ் "இது மிகவும் தர்ம சங்கடமானது" என்று கூறியுள்ளார்.
ஜூலை 18ஆம் தேதி தென் ஆப்பிரிக்க தலைவர் நெல்சன் மண்டேலாவின் 90ஆவது பிறந்த நாள். அன்றைய தினத்திற்குள் இது சரி செய்யப்படுவதற்கு தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.