புடின் பிரதமர்: ரஷ்ய நாடாளுமன்றம் உறுதி!

வெள்ளி, 9 மே 2008 (14:49 IST)
மாஸ்கோ: ரஷ்யாவின் 10ஆவது பிரதமராக பதவியேற்க முன்னாள் அதிபர் புடினுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமோக ஆதரவளித்துள்ளனர்.

-இதற்காக நேற்று நடைபெற்ற வாக்கெடுப்பில் 450 உறுப்பினர்களில் 392 உறுப்பினர்கள் புடினுக்கு ஆதரவாக வாக்களித்தனர். 56 கம்யூனிஸ்ட்கள் புடினுக்கு எதிராக வாக்கள்லித்தனர்.

முன்னதாக 3ஆவது முறையாக அதிபர் பொறுப்பு ஏற்பதை ரஷ்ய அரசியல் சட்டம் அனுமதிக்கவில்லை என்பதால் அதிபர் பதவியில் மெத்வதேவ் நியமிக்கப்பட்டார்.

நாடாளுமன்றத்தில் புடின் ஆற்றிய உரையில் தேசிய பொருளாதரத்தை நிலை நிறுத்தி திறம்பட மேம்படுத்தி, மனித வளத்தை பெருக்குவதே முதல் குறிக்கோள் என்றார்.

வெப்துனியாவைப் படிக்கவும்