அமெரிக்க ஜனநாயகக் கட்சி அதிபர் வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன், பேட்டி ஒன்றில் இஸ்ரேல் மீது ஈரான் அணு ஆயுதத் தாக்குதல் நடத்தினால் ஈரானை முற்றிலும் அழிப்போம் என்று கூறியதையடுத்து ஐ.நா.வில் ஈரான் புகார் செய்துள்ளது.
இது குறித்து ஐ.நா.விற்கான ஈரான் உதவி தூதுவர் மெஹ்தி தனேஷ்-யஸ்தி ஐ.நா. தலைமைச் செயலர் பான் கி மூனிற்கு எழுதிய கடிதத்தில், ஹிலாரியின் அம்மாதிரியான பேச்சு தேவையற்றது என்றும் பொறுப்பற்றது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ஹிலாரியின் கூற்று ஐ.நா. விதிமுறைகளை மீறியது என்றும், பிற நாடுகளின் உரிமைகள் மீதான சர்வதேச சட்ட விதிமுறைகளுக்கு புறம்பானது என்றும் அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
எந்த ஒரு நாட்டின் மீதும் தாக்குதல் நடத்தும் எண்ணம் ஈரானுக்கு இல்லை என்று யாஸ்தி வலியுறுத்தியுள்ளார். எனினும் ஈரான் மீது எந்த நாடு தாக்குதல் நடத்த முயற்சித்தாலும் அதிலிருந்து தற்காத்துக் கொள்ள ஈரானும் செயல்படும் என்று கூறியுள்ளர்.