சீனாவில் இரு நகரங்களுக்கு இடையேயான உலகின் மிக நீளமான கடற்பாலம் திறக்கப்பட்டுள்ளது.
webdunia photo
WD
36 கி.மீ. தூரம் உள்ள இந்த ஹேங்ஸூ வளைக்குடாப்பாலம், ஷாங்காயிலிருந்து தொழிற்சாலை நகரமான நிங்போவை கடல் வழியாக இணைக்கிறது. உலகிலேயே மிக நீளமான கடற்பாலம் இதுவே என்று சீன அரசு தெரிவித்துள்ளது.
இந்த இரு நகரங்களுக்கும் இடையே 150 கி.மீ க்கும் மேல் இருந்த சாலை வழி தூரம் தற்போது இந்த கடற்பாலத்தால் வெறும் 36 கி.மீ. ஆக குறைந்துள்ளது.
இந்த பாலக் கட்டுமானத்தில் தனியார் முதலீட்டாளர்களின் முதலீடுகளும் சேர்ந்துள்ளது. சீன உள்கட்டமைப்பு திட்டத்தில் முதன் முதலாக தனியார் முதலீடுகள் வரவேற்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
6 வழிப்பாதையாக அமைக்கப்பட்டுள்ள இந்த பாலத்தில் வாகனங்கள் சுமார் 100 கி.மீ வேகம் வரை செல்லலாம். 1.7 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் கட்டப்பட்டுள்ள இந்த கடற்பாலக் கட்டுமானம் 2003ம் ஆண்டு நவம்பரில் துவங்கியது.
webdunia photo
WD
சீனாவில் இதற்கு முன்பு ஷாங்காயிலிருந்து யாங்ஷான் துறைமுகத்தை இணைக்கும் 32.5 கி.மீ. கடற்பாலம் கட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.