பின் லேடன் மகன் பிரிட்டனில் நுழையத் தடை!

புதன், 30 ஏப்ரல் 2008 (13:14 IST)
அல்-கய்டா பயங்கரவாதத் தலைவர் ஒசாமா பின் லேடனின் மகன் பிரிட்டனுக்குள் நுழைய அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.

பின் லேடனின் மகனான ஓமர் ஒ‌ஸ்‌ஸாமா‌வி‌ன் புதிய மனைவி லண்டனில் வசித்து வருகிறார். அவருடன் சேர்ந்து வாழ இவர் லண்டன் வரவிருந்தார்.

இந்த நிலையில் அவரது வருகை பொதுமக்கள் மத்தி‌யி‌ல் கவலையை ஏற்படுத்தலாம் என்ற காரணத்தினால் பிரிட்டனுக்குள் அவர் நுழைய தடை விதி‌க்க‌ப்ப‌ட்டுள்ளது.

மகன் ஓமர் ஒ‌ஸ்ஸாமா இன்னமும் தன் தந்தையின் விசுவாசியாக இருப்பதற்கான தடயங்கள் இருப்பதாக பிரிட்டன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

திருமணத்திற்கு முன்பு ஜேன் ஃபெலிக்ஸ் பிரௌன் என்ற பெயர் கொண்டிருந்த பிரிட்டன் பெண்மணியை ஓமர் ஒ‌ஸ்ஸாமா கடந்த ஆண்டு சவுதி அரேபியாவில் மணமுடித்தார்.

ஓமரின் மனைவி தற்போது ஸைனா அல்ஸபா பின் லேடன் என்ற புதிய பெயருடன் லண்டன் சீஷயரில் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் விசா மறுக்கப்பட்டுள்ள ஓமர் ஒ‌ஸ்ஸாமா, அவரது மனைவி ஸைனா பில் லேடன் இருவரும் மேல்முறையீடு செய்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்