லாசா கலவர‌ம்: 17 பேரு‌க்கு‌‌ச் ‌சிறை!

செவ்வாய், 29 ஏப்ரல் 2008 (13:25 IST)
திபெ‌த் தலைநக‌ர் லாசா‌வி‌ல் கட‌ந்த மாத‌ம் நட‌ந்த வ‌‌ன்முறை‌ச் ‌ச‌ம்பவ‌ங்க‌ளி‌ல் தொட‌ர்புடைய கு‌ற்ற‌‌த்‌தி‌ற்காக 17 பேரு‌க்கு ‌சிறை த‌ண்டனை வழ‌ங்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

கு‌ற்றவா‌ளிக‌ளு‌க்கு குறை‌ந்தது 3 ஆ‌ண்டுக‌ள் முத‌ல் அ‌திகப‌ட்சமாக ஆ‌யு‌ள் த‌‌ண்டனை வரை வழ‌ங்க‌ப்ப‌ட்டு‌ள்ளதாக ‌சீன அரசு செ‌ய்‌தி ‌நிறுவன‌ம் தெ‌ரி‌வி‌க்‌கிறது.

‌‌திபெ‌த் தலைநக‌ர் லாசா‌வி‌ல் ‌சீன அர‌சி‌ற்கு எ‌திராக கட‌ந்த மா‌ர்‌ச் 14 ஆ‌ம் தே‌தி நட‌ந்த வ‌ன்முறை‌ச் ச‌ம்பவ‌ங்க‌ளி‌ல் ஏராளமான க‌ட்டட‌ங்க‌ள் அடி‌த்து நொறு‌க்க‌ப்ப‌ட்டதுட‌ன் ‌தீ‌யி‌ட்டு‌ம் கொளு‌த்த‌ப்ப‌ட்டன.

இ‌ந்த‌க் கலவர‌த்‌தி‌ல் 22 பே‌ர் கொ‌ல்ல‌‌ப்ப‌ட்டதாக ‌சீன அரசு‌ம், நூ‌ற்று‌க்கு‌ம் மே‌ற்ப‌ட்டவ‌ர்க‌‌ள் கொ‌ல்ல‌‌ப்ப‌ட்டதாக ‌திபெ‌‌த்‌திய‌ர்களு‌ம் தெ‌ரி‌வி‌த்தன‌ர் எ‌ன்பது கு‌‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்