அணு சக்தி 123 ஒப்பந்தத்தில் மாற்றம் இல்லை- அமெரிக்கா!

சனி, 26 ஏப்ரல் 2008 (13:47 IST)
இந்தியா-அமெரிக்கா இடையிலான அணுசக்தி ஒத்துழைப்பிற்கான ஒப்பந்தத்தில், எதிர்ப்புத் தெரிவித்து வரும் அரசியல் கட்சிகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக, எந்த மாற்றமும் செய்யப்பட மாட்டாது என அமெரிக்கா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய போது இதனை தெரிவித்த அமெரிக்க செய்தித் தொடர்பாளர் ஷான் மெக்கார்மக், இதற்கு இந்தியா தீர்வு கண்டால், அது அவர்கள் அரசியல் அமைப்பிற்குட்பட்டதாகவே இருக்கும், கையெழுத்திட்ட ஒப்பந்தத்தின் விதிமுறைகளுக்குள் இதற்கு தீர்வு காண்பதென்பது இந்தியாவின் கையில்தான் உள்ளது என்றும் கூறியுள்ளார்

எனவே, 123 ஒப்பந்தத்தில் அமெரிக்கா எந்தவித மாற்றத்தையும் மேற்கொள்ளாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

வெப்துனியாவைப் படிக்கவும்