பாக். அணுத்திறன் ஏவுகணை சோதனை!

சனி, 19 ஏப்ரல் 2008 (14:19 IST)
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் இன்று அணுத்திறன் கொண்ட போர்க்கருவிகளை சுமக்கும் நீண்ட தூர ஏவுகணையை ‌‌செலுத்தி சோதனை செய்துள்ளது.

பாகிஸ்தான் புதிய பிரதமர் யூசுஃப் ரஸா கில்லானி, பாதுகாப்பு அமைச்சர் சவுத்ரி அஹமத் முக்தார், ராணுவ ஜெனரல் தாரிக் மஜித் முன்னிலையில் இந்த ஏவுகணை சோதனை நடத்தப்பட்டுள்ளது.

ஷாஹீன் - 2 அல்லது ஹத்ஃப் 6 என்று அழைக்கப்படும் இந்த நீண்ட தூர ஏவுகணை 2000 கி.மீ தூர‌த்‌தி‌ல் உ‌ள்ள தரை இலக்குகளை தாக்கவல்லது.

ஏவுகணை சோதனை மேற்கொள்ளப்பட்ட இடம் குறித்த தகவல்கள் தெ‌ரி‌வி‌க்க‌ப்பட‌வி‌ல்லை.

வெப்துனியாவைப் படிக்கவும்