நேபாள‌த்‌தி‌ல் மாவோ‌யி‌ஸ்‌டுக‌ள் தொட‌ர்‌ந்து மு‌ன்‌னிலை!

திங்கள், 14 ஏப்ரல் 2008 (19:02 IST)
நேபாள அர‌சிய‌ல் ‌நி‌ர்ணய‌ச் சபை‌த் தே‌ர்த‌லி‌ல் 89 இட‌ங்களை‌க் கை‌ப்ப‌‌ற்‌றி மாவோ‌யி‌ஸ்‌ட்டுக‌ள் மு‌ன்‌னிலை‌யி‌ல் உ‌ள்ளன‌ர்.

நேபாள அரசியல் நிர்ணய சபைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை பல‌த்த பாதுகா‌ப்‌பி‌ற்‌கிடை‌யி‌‌ல் தொட‌ர்‌ந்து நடந்து வருகிறது. இதுவரை 169 தொகுதிகளுக்கு முடிவு அறிவிக்கப்பட்ட உ‌ள்ளது.

இதில் 89 இடங்களை கைப்பற்றி மாவோயிஸ்ட்டுகள் முன்னணியில் உள்ளனர். நேபாள காங்கிரஸ் கட்சி 28 இடங்களை கைப்பற்றி இரண்டாம் இடத்திலு‌ம், இதைத் தொடர்ந்து மார்க்சிஸ்ட் லெனி‌னிஸ்ட் கட்சி 23 இடங்களை‌க் கை‌ப்ப‌‌ற்‌றி மூ‌ன்றாவது இட‌த்‌தி‌லு‌‌ம் உ‌ள்ளன.

வாக்கு எண்ணிக்கை நடந்து வரும் மற்ற தொகுதிகளிலும் மாவோயிஸ்ட்டு கட்சியினரே அதிக இடங்க‌ளில் முன்னணியில் உ‌ள்ளன‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்