வட கொரியா மீதான பொருளாதரத் தடை நீட்டிப்பு: ஜப்பான்!
வெள்ளி, 11 ஏப்ரல் 2008 (13:06 IST)
2006ஆம் ஆண்டு அணு ஆயுதச் சோதனைகளை வட கொரியா மேற்கொண்டுள்ளதால் அதன் மீதான பொருளாதார தடைகளை மேலும் 6 மாதங்களுக்கு ஜப்பான் நீட்டித்துள்ளது.
வடகொரியா அணு ஆயுதங்களை அழிக்கும் திட்டத்தில் மந்தம் காட்டி வருவதால் ஜப்பான் நாடாளுமன்றம் இந்த பொருளாதாரத் தடை நீட்டிப்பிற்கு ஒரு மனதாக ஆதரவு தெரிவித்துள்ளது.
வடகொரியா கப்பல்கள் ஜப்பான் துறைமுகங்களில் நுழைவதற்கும், வடகொரியாவிலிருந்து இறக்குமதி செய்வதற்கும், ஜப்பான் தடை விதித்திருந்தது. ஆனால் அக்டோபர் 9, 2006ல் வடகொரியா அணு ஆயுதச் சோதனைகள் மேற்கொண்டதால் அதன் பிறகு 3 முறை பொருளாதாரத் தடைகள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஜப்பான் குடிமக்களை வடகொரியா கடத்தி வந்த விவகாரத்தில் இன்னமும் வடகொரியா சரியான ஒத்துழைப்பு வழங்கவில்லை என்பதும் பொருளாதாரத் தடைகளுக்கு ஒரு முக்கிய காரணமாக இருந்து வருகிறது.