இராக்‌கி‌‌லிரு‌ந்து படைகளை திரும்பப் பெற மெக்கெய்ன் எதிர்ப்பு

செவ்வாய், 8 ஏப்ரல் 2008 (10:54 IST)
அமெரிக்க குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜான் மெக்கெய்ன் அவசரப்பட்டு இராக்கிலிருந்து படைகளை திரும்ப அழைத்துக் கொண்டால் இராக் நிலைமை மேலும் மோசமடையும் என்று எச்சரித்துள்ளார்.

மிசௌரியில் உள்ள கான்சாஸ் நகரில் அயல் நாட்டில் போர் வீரர்களாக பணியாற்றியவர்கள் மத்தியில் பேசுகையில், இராக் பற்றி சிந்திக்கையில் கவனம் அதன் எதிர்காலத்தின் மீது இருக்கவேண்டுமே தவிர கடந்த காலத்தில் அல்ல என்றார்.

"இராக்கிலிருந்து உடனடியாக படைகளை திரும்பப் பெறவேண்டும் என்று குரல் எழுப்புவர்களுக்காக கூறுகிறேன், பொறுப்பற்ற முறையில் தற்போது படைகளை திரும்பப் பெற்றால் பிரச்சனைகளும் உடனடியாக தலை தூக்கும், அரபு நாடுகள், ஐ.நா, இராக்கியர்கள் ஆகியோர் தாங்களாகவே பொறுப்பை உணர்ந்துகொள்ள வழியில்லை என்று கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் மத்தியக் கிழக்கு பகுதி முழுதையுமே பாதிக்கும் ஒரு முடிவை எளிதாக எடுத்து விட முடியாது என்றார்.

வெப்துனியாவைப் படிக்கவும்