ஒலிம்பிக் விழாவில் பங்கேற்க வேண்டாம்-புஷ்ஷிடம் வலியுறுத்தல்

வியாழன், 3 ஏப்ரல் 2008 (10:02 IST)
சீனாவின் மனித உரிமை மீறல்கள் செயல்பாடுகளை காரணம் காட்டி அமெரிக்க நாடாளுமன்றத்தின் 15 உறுப்பினர்கள், பீஜிங் ஒலிம்பிக் போட்டித் துவக்கவிழாவில் கலந்து கொள்ளவேண்டாம் என்று அதிபர் ஜார்ஜ் புஷ்ஷை வலியுறுத்தியுள்ளனர்.

இது குறித்து இவர்கள் கூட்டாக கையெழுத்திட்ட கடிதத்தில், சீன அரசின் அடக்குமுறைகள் அதிகரித்து வருகிறது இதனால் ஒலிம்பிக் போட்டித் துவக்க விழாவில் புஷ் கலந்து கொள்வது முறையானதல்ல என்று குறிப்பிட்டுள்ளனர்.

ஜன நாயகக் கட்சியைச் சேர்ந்த 14 உறுப்பினர்களும், குடியரசுக் கட்சியின் நீண்ட கால சீன விமர்சகரான டானா ரோஹ்ராபாக்கர் என்பவரும் இந்த கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.

திபெத் மீதான அடக்குமுறை, சூடான் அரசுடனான சீனாவின் நெருங்கிய பொருளாதார உறவு, மதம் மற்றும் மனித உரிமை அமைப்பினர்கள் மீது சமீபத்தில் சீனா நடத்திய அடக்குமுறைகள் ஆகியவற்றை இந்த கடிதத்தில் அவர்கள் எடுத்துரைத்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்