காட்மாண்டில் 259 திபெத்தியர்கள் கைது!

செவ்வாய், 1 ஏப்ரல் 2008 (17:11 IST)
நேபாளில் உள்ள சீன தூதரக அலுவலகத்திற்கு முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற 259 திபெத்தியர்கள் கைது செய்யப்பட்டனர்.

பு‌த்த மதத் தலைவர் தலாய் லாமாவை திபெத்தில் வசிப்பதற்கு அனுமதி வழங்கக்கோரியும், திபெத்தில் அமைதி நிலவ வலியுறுத்தியும் ஹத்திஷார் பகுதியில் உள்ள சீன தூதரக விசா பிரிவு மையம் முன்பு திபெத்தியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றனர். அப்போது, 118 பெண்கள் உட்பட 259 பேரை காட்மாண்டு காவல்துறையினர் கைது செய்தனர்.

இது குறித்து காவல்துறை கண்காணிப்பாளர் சர்பேந்திரா கானல் கூறுகையில், "உயர்ந்த சுற்றுச்சுவர் கொண்ட தூதரகத்தின் முன்பு சில போராட்டக் குழுவினர் சுற்று வளைக்கப்பட்டனர். முன்னதாக பெரும்பாலானோர் கைது செய்யப்பட்டு வாகனங்களில் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்" என்றார். போராட்டத்தின் போது தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

வெப்துனியாவைப் படிக்கவும்