அணுச‌க்‌தி ஒ‌ப்ப‌ந்த‌ம் : பிரணாப் - புஷ் இன்று சந்தி‌ப்பு!

திங்கள், 24 மார்ச் 2008 (13:59 IST)
அமெ‌ரி‌க்கசெ‌ன்று‌ள்ள ‌இ‌ந்‌திஅயலுறவு அமை‌ச்ச‌ர் ‌பிரணா‌பமுக‌ர்‌ஜி இ‌ன்றஅ‌ந்நா‌ட்டு அ‌திப‌ரஜா‌ர்‌ஜபு‌ஷ்சச‌ந்‌தி‌‌‌த்து ‌அணுச‌க்‌‌தி ஒ‌ப்ப‌ந்த‌மகு‌றி‌த்தஆலோசனநட‌த்து‌கி‌றா‌ர்.

இரண்டு நாள் பயணமாக அமெ‌ரி‌க்கசென்றுள்ள ‌பிரணா‌ப் முக‌ர்‌ஜி, முத‌லில் அமெரிக்க அயலுற‌வு அமை‌ச்ச‌ர் கண்டலீசா ரைசை சந்தி‌த்து அணுசக்தி ஒப்பந்தம் உட்பட இரு தரப்பு உறவுகள் குறித்து ஆலோசனை நட‌த்து‌கிறா‌ர்.

‌‌பி‌ன்ன‌ர், வெள்ளை மாளிகை‌யி‌ல் அதிபர் புஷ்சை சந்தி‌‌க்கு‌ம் அவ‌ர், இரு நாடுகளுக்கு இடையேயான ந‌‌ல்லுறவு, தேசிய, சர்வதேச பிரச்சனைகள், அணுசக்தி ஒப்பந்தம் ஆகியவை குறித்து‌ ஆலோசனை நடத்த உள்ளார்.

அணுசக்தி ஒப்பந்தத்தை வரு‌ம் மே மாதத்துக்குள் இறுதி செய்யுமாறு அமெரிக்கா கெடு விதித்து உள்ள ‌நிலை‌யி‌ல் ‌பிரணா‌ப் முக‌ர்‌‌ஜி‌யி‌ன் இ‌ந்த பயண‌ம் மு‌க்‌கிய‌த்துவ‌‌ம் வா‌ய்‌ந்ததாக கரு‌த‌ப்படு‌கிறது.

இதற்கிடையே, இ‌ந்‌திய- அமெ‌ரி‌க்க அணுச‌‌க்‌தி ஒ‌த்துழை‌ப்பு ஒ‌ப்ப‌ந்த‌த்தை ‌நிறைவே‌ற்‌றினா‌ல், ம‌த்‌திய அரசு‌க்கு அ‌‌ளி‌த்து வரு‌ம் ஆதரவை ‌வில‌க்‌கி‌க் கொ‌ள்வோ‌ம் எ‌ன்று இடதுசா‌ரிக‌ள் எ‌ச்ச‌ரி‌த்து வருவது கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்