அமெரிக்கர்கள் மத்தியில் இந்தியா பிரபலமான நாடு!

திங்கள், 10 மார்ச் 2008 (18:23 IST)
அமெரிக்கர்கள் மத்தியிலான பிரபலமான நாடுகள் பட்டியலில் இந்தியா 6-வது இடத்தை பிடித்துள்ளது. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் நாடுகள் மிகவும் பிரபலமில்லாத நாடுகள் பட்டியலில் உள்ளன.

18 வயதிற்கு மேற்பட்ட ஆயிரத்து ஏழு அமெரிக்கர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில், 69 விழுக்காட்டினர் மத்தியில் இந்தியா பிரபலமான நாடாக உள்ளது. கனடா, பிரிட்டன், ஜெர்மன், ஜப்பான் ஆகியவை பிரபலமான நாடுகளாக 80 விழுக்காட்டினர் தெரிவித்துள்ளனர். பிரபலமில்லாத நாடுகள் பட்டியலில் ஈரான் முதல் இடத்தில் உள்ளது. இதில் 88 விழுக்காடு அமெரிக்கர்கள் எதிராக ஓட்டளித்துள்ள நிலையில், 8 விழுக்காட்டினர் மட்டுமே ஈரானுக்கு சாதகமாக ஓட்டளித்துள்ளனர்.

பிரபலமற்ற நாடுகள் பட்டியலில் பாகிஸ்தான் 6-வது இடத்தை பிடித்துள்ளது. பாகிஸ்தானுக்கு சாதகமாக 22 விழுக்காட்டினர் மட்டுமே ஒட்டளித்துள்ள நிலையில், எதிராக 72 விழுக்காட்டினர் ஓட்டளித்துள்ளனர். இதே பட்டியலில் ஆப்கானிஸ்தான், சவுதி அரேபியா, ஈராக் ஆகிய நாடுகளும் உள்ளன.

அதனையடுத்து, வடகொரியாவுக்கு எதிராக 82 விழுக்காடும், சாதகமாக 12 விழுக்காடும், பாலஸ்தீனத்திறுக்கு எதிராக 75 விழுக்காடும், சாதகமாக 14 விழுக்காடும் ஓட்டளித்துள்ளனர். அமெரிக்க போரிட்ட ஈராக் பிரபலமில்லாத நாடுகள் பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது. இந்நாட்டிற்கு எதிராக 77 விழுக்காடும், சாதகமாக 20 விழுக்காடும் ஓட்டுக்கள் பதிவாகியுள்ளன. பிரபலமில்லாத நாடுகள் பட்டியலில் சீனா 10-வது இடத்தில் உள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்