ஜெருசலேம் தாக்குதல்-ஐ.நா கண்டனம்!

வெள்ளி, 7 மார்ச் 2008 (13:19 IST)
மேற்கு ஜெருசலேமில் உள்ள யூத மத போதனைக் கூடத்தில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு கண்டித்து ஐ.நா பொதுச் செயலர் பான் கி மூன் கடும் கண்டனம் தெரிவித்த்துள்ளார்.

ஜெருசலேம் மேற்கு பகுதியில் உள்ள யூத மதப் போதனைககூடம் ஒன்றில் துப்பாகி ஏந்திய ஒருவன் புகுந்து சரமாரியாக சுட்டதில் 8 பேர் கொல்லப்பட்டனர், 9 பேர் காயமடைந்தனர்.

இது குறித்து ஆழ்ந்த கவலை வெளியிட்டுள்ள ஐ.நா பொதுச் செயலர் பான் கி மூன் தனது கண்டன அறிக்கையில் இந்த தாக்குதலை காட்டுமிராண்டித்தனமானது என்று கூறியுள்ளார்.

அரசியல் தீ‌ர்வை குலைக்கும் செயல் இது என்று பான் கி மூன் தெரிவித்துள்ளதோடு இஸ்ரேல், பாலஸ்தீனம் ஆகிய நாடுகளிடையே அமைதி ஏற்படுத்தும் நடைமுறை தொடர்ந்து மேற்கொள்ளப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்